சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு, சிலாவத்தை முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் காணப்படுகின்ற 10 பெண்களுக்கே இன்று (12) காலை 10 மணியளவில் குறித்த வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பெண்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமது அன்றாட உணவினை கூட பெற்றுக்கொள்வதில் துன்பப்படும் நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நிலையில் கருவாடு பதனிடுதல் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஒரு நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கருவாடு பதனிடும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
 Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating: 







 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment