அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் சிறப்பாக இடம் பெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடல்

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் பாடசாலை அபிவிருத்திக்கு என நிதி சேகரிக்கும் முகமாகவும் வருடாந்தர பழைய மாணவர் ஒன்றுகூடல் இம்மாதம் 27 திகதி மன்னார் நகரசபை மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.


பழைய மாணவர்களின் பங்களிப்பை பாடசாலை மட்டத்தில் அதிகரிப்பதுடன் பழைய மாணவர்கள் மத்தியில் ஒன்றிணைவை ஏற்படுத்தும் முகமாக கலை நிகழ்வுகள் மற்றும் இரவு உணவுடன் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்ற அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது டன் நிகழ்வுக்கான முற்பதிவுக்கும்  நிகழ்வு தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்கும் 0778580351 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் (071) 678 0965 பயன்படுத்துமாறுi ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்





மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் சிறப்பாக இடம் பெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடல் Reviewed by NEWMANNAR on December 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.