மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு.
மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை(7) மதியம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர். R.P.A ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில், சிவில் சமூகத் தொடர்பு அதிகாரி மேஜர் ஆ.ஏ. பெர்னாண்டோவின் ஏற்பாட்டிலும் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் 54 வது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று (07) காலை 9.00 மணியளவில் மன்னார் நகர பொது விளையாட்டரங்கில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.

No comments:
Post a Comment