முத்துஐயன்கட்டில் காட்டுயானை தாக்கியதில் இளைஞன்பலி!
முத்துஐயன்கட்டில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் இளைஞன்பலி
முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு பகுதியினை சேர்ந்த 23 அகவையுடைய கேந்திரராசா பிறையாளன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் உடல் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக குறித்த யானை விவசாயிகளின் மக்கள் குடியிருப்பு பகுதியில் நின்று அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றார்கள்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு நேரத்திற்கு அறிவித்தும் உடன் நடவடிக்கை எடுக்காததால் ஒரு உயிரிரை பிரிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
முத்துஐயன்கட்டில் காட்டுயானை தாக்கியதில் இளைஞன்பலி!
Reviewed by Author
on
October 27, 2024
Rating:

No comments:
Post a Comment