அண்மைய செய்திகள்

recent
-

வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்காத 30 முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசஸ்தலங்களை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று (22) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த வீடுகளை ஒப்படைக்காவிடின், நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாதிவெலயில் உள்ள வீட்டுத் தொகுதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகளை பெற்றுத் தருமாறு சுமார் 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகள் தேவைப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற நிர்வாகம் முன்னர் அறிவித்தல் விடுத்திருந்தது.

பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தில் வீடுகளைக் கொண்டவர்களுக்கு, இதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம்.




வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்காத 30 முன்னாள் எம்.பிக்கள் Reviewed by Author on November 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.