அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 70 வயதை கடந்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அரசாங்கம் கொடுபனவு வழங்கவுள்ளது.


அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.





முதியோர் கொடுப்பனவு


நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு பெறும் முதியோர்க்கான 3,000 ரூபாய் கொடுப்பனவானது இந்த மாதத்திலிருந்து குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட அந்த சபை தீர்மானித்துள்ளது.




அதன்படி, இன்று (22) முதல் குறித்த முதியோர் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளது.


அதேநேரம், அஸ்வெசும கொடுப்பனவைப் பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்கள் அவர்களின் கொடுப்பனவை, வழமைபோல அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.




இலங்கையில் 70 வயதை கடந்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி Reviewed by Author on November 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.