குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்த திட்டம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டம் 2025 – 2027 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும், இதற்காக, குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நாடளாவிய ரீதியிலான வேலை திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம் பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்ப கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 50 குடும்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
January 13, 2025
Rating:


No comments:
Post a Comment