ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை
ஹெராயின் 16 கிராமுக்கும் அதிகமான அளவு வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித இந்த உத்தரவை வழங்கினார்.
கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த 2019 பெப்ரவரி 17ஆம் திகதி 16.88 கிராம் ஹெராயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை விதிக்கப்பட்ட நபர் 47 வயது திருமணமானவர் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது
ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை
Reviewed by Vijithan
on
April 03, 2025
Rating:

No comments:
Post a Comment