முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள் 10 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
அதிக குற்றங்கள் நிகழும் ஐம்பத்திரண்டு காவல் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. “குற்றவாளிகளைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது தீவு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவசரகால சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் ஒரு சிறப்பு நடவடிக்கைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment