சர்வதேச சமையல் போட்டியில் சாதனை படைத்த இலங்கைப் பெண்கள்; யாழ் பெண்ணுக்கு தங்கப் பதக்கம்
Expo Culinaire சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், இன்று நாட்டை வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே 21 முதல் 23 ஆம் திகதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில், பங்கேற்றனர்.
முதல் முறையாக சர்வதேச போட்டியில் வெற்றி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அதோடு , நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
கொழும்பில் வசிக்கும் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். முதல் முறையாக அவர்கள் மூவரும் ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுற்றுள்ளனர்.
மூவரும் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் G9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகாலை 04.30 மணிக்கு வந்தடைந்தனர்,
Reviewed by Vijithan
on
May 29, 2025
Rating:


No comments:
Post a Comment