காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி - கஜேந்திரகுமார் பென்னம்பலம்
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார் .
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடமாகாணத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து இந்த வர்த்தமானி வாபஸ்பெற வைத்தது பெரும் வெற்றி என்றே செல்லவேண்டும்.
அந்த வகையில் பாராளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம் அதில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் எனைய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுவதுடன் நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை வாபஸ்பொறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம் அவர்களும் எமக்கு வாக்குறுதியளித்திருந்தார்கள் நாங்கள் இவற்றைக் கலந்துரையாடுவோம் என்று அவர்களும் இதனைச் செய்திருக்காவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது எனவே இவர்களுக்கும் எமது நன்றிகள் இந்த அரசாங்கம் எங்கள் கருத்துகளைக் கேட்டு இவற்றைச் செய்யும் என்றால் இனப்பிரச்சினையே இருக்காது.
பாராளுமன்றத்தில் இவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது. மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி நிசாம் காரியப்பர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் றவுப் ஹக்கிம் அவர்களுக்கும் விசேட நன்றிகள் பிரதமருடன் சந்திப்பில் இவர்கள் இருவரும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார்.
இதில் முக்கியமாக இந்த வர்தகமானி வாபஸ் பெறப்பட்டமையானது தமிழ்பேசும் மக்களாக நாங்கள் இணைந்து விவாதித்தது கூட்டு முயற்சியாக வெற்றியளித்தது இதனைத் தமிழ் முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் என்று கூறுவது மட்டுமல்லாது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பொருன்பான்மைக்கு அதிகமாக அவர்கள் இருக்கும் நிலையில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைந்து செயற்பட்டதன் வெற்றியாகும்.
சிங்கள மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு நாம் கேடுதல் செய்யவில்லை என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு எதிராக நடக்க வேண்டும் என்பது எமது அடிப்படை கோட்பாடு அல்ல. முஸ்லிம் மக்களையும் நாம் இணைத்துச் செயற்படுவதன் மூலம் நாம் அசைக்க முடியாத பலத்தை வெற்றியை அடையலாம்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், மற்றும் அருந்தவபாலன் கலந்து கொண்டார்கள்.
.jpg)
No comments:
Post a Comment