புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட்
இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி இன்று (8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரேிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவருக்கு பாப்பரசர் லியோ என்று பெயரிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
69 வயதான பாப்பரசர் லியோ, அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
அதன்படி, உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் தலைவராக பாப்பரசர் லியோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதை அடுத்து புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், ஏப்ரல் 21 ஆம் திகதி வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தனது இல்லத்தில் நித்திய இளைப்பாறினார்
.
Reviewed by Vijithan
on
May 09, 2025
Rating:


No comments:
Post a Comment