நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, கடந்த 2022 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு அளித்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பான விடயங்களை சட்டமா அதிபருக்கு அளித்துள்ளனர்.
சந்தேகநபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது
Reviewed by Vijithan
on
May 22, 2025
Rating:

No comments:
Post a Comment