மன்னார் மாந்தை கிராமத்தைச் சேர்ந்த 27 குடும்பங்களுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு.
மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) காணி அனுமதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் மாந்தையில் இடம்பெற்ற குறித்த காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் . மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) தமா. சிறிஸ்கந்தராஜா மற்றும் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர் கிராம மட்ட அலுவலர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்த துடன் பொது மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்களையும் வழங்கி வைத்தனர்.
குறித்த 27 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், அரச சட்ட திட்டங்களுக்கு அமைவாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment