ரணிலின் வழக்கு ஒக்டோபரில் மீண்டும்
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கடந்த 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் இன்று (26) நீதிமன்றில் ஆராயப்பட்டது.
இதன்போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
ரணிலின் வழக்கு ஒக்டோபரில் மீண்டும்
Reviewed by Vijithan
on
August 26, 2025
Rating:

No comments:
Post a Comment