வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி லண்டனிலும் நேற்று ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரியும் செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டியும்
நேற்று - வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவ
லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.சிறிலங்கா உய
ர்ஸ்தானிகரகத்திருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்
பெயர் தமிழ் உறவுகள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை செய்யப்பட்டு செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட
டோருக்கும் வலிந்து காணாமல் லாக்கப் பட்டோருக்கும் நீதி கோரியும் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை உணர்வுபூர்வமாக முன்வைத்தனர்.

No comments:
Post a Comment