பிரதமர் மோடி 07 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவை சென்றடைந்தார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார்.
சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுள்ளார்.
சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்களையும் சந்திக்கிறார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 02 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாவை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அத்தோடு இந்தியா விரைவில் 03 ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:
Post a Comment