3 விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தம்
தேசிய தடகள, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த அறிவிப்பு நேற்று (25) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், குறித்த மூன்று சங்கங்களின் நிர்வாக மற்றும் மேற்பார்வை செயல்பாடுகள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின்படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
3 விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தம்
Reviewed by Vijithan
on
August 26, 2025
Rating:
Reviewed by Vijithan
on
August 26, 2025
Rating:


No comments:
Post a Comment