திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது.
இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.
போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்
திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
Reviewed by Vijithan
on
January 30, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 30, 2026
Rating:


No comments:
Post a Comment