மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர்
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ க்கும் இடையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) மதியம் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடியுள்ளார்.
நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட நிலையில் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர்
Reviewed by Vijithan
on
March 03, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 03, 2026
Rating:


No comments:
Post a Comment