அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப் பரீட்சையில் 100% சித்தி: மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை!

 2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் நூற்றுக்கு நூறு வீத சித்தியைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. 


சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) பாடசாலை அதிபர் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


இம்முறை வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில், இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளார்கள்.


அந்த வகையில் பௌதீக விஞ்ஞானப் (Physics) பிரிவில் தோற்றிய மாணவன் குளோடியன்ஸ் கிளாறட், மன்னார் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


அது தவிர வர்த்தகப் பிரிவில் தோற்றிய மாணவன் க.சுசீந்திரராசா, மாவட்ட ரீதியில் 6-ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.


மேலும் முதலிடம் பெற்ற மாணவர் உட்பட மொத்தம் ஏழு மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.


அது தவிர பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஏழு மாணவர்களை தவிர்ந்த ஏனைய 10 மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்து, பாடசாலையின் 100% சித்தி என்ற இலக்கை எட்ட உதவியுள்ளனர்.


வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மடு கோட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.


இதன்போது, சாதனை படைத்த மாணவர்கள் அனைவரும் விமர்சையாக வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் எதிர்காலக் கல்வியைத் தொடர ஏதுவாக ஊக்கத்தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது.


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவர்களின் கடின உழைப்பையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டியிருந்தனர்.


இந்த நிகழ்விற்கான அனைத்து உதவிகளையும் பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















உயர்தரப் பரீட்சையில் 100% சித்தி: மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை! Reviewed by Vijithan on April 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.