அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெண் சுய தொழில் உற்பத்தியாளரின் விற்பனைநிலையம் திறந்து வைப்பு

 மன்னார் மாந்தை மேற்கு பகுதியில் கோவில் குளம் பிரதேசத்தில்   பெண் சுயதொழில் உற்பத்தியாளரான ஸ்ரீபாலன் ஜென்சி அவர்களினால் கலப்படமற்ற ஆரோக்கியமான உணவுகளுக்கான விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது   . தற்போது மன்னார் மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியாளர்களின் உடைய முயற்சிகளுக்கு அதிக வரவேற்பாளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 10.04.2026 அன்று காலை 9 மணி அளவில்  S.Jதயாரிப்புகள் என்கின்ற பெயரில்   விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது 

குறித்த விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில்  விருந்தினர்களாக  மாவட்ட விதாதா அலுவலர் திரு. செ. மரியான், மாந்தை மேற்கு பிரதேச செயலக விதாதா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.  சகாய சக்தியன், மன்னார் மாவட்ட செயலக சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு  உத்தியோகஸ்தர் அ. கிறிஸ்டியா, வட மாகாண சபை தொழில்துறை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி காயத்ரி, மாந்தை மேற்கு பிரதேச செயலக மகளிர் விவகார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி ப்ரெய்னா அவர்களும்  கலந்து கொண்டிருந்தனர்

 குறித்த விற்பனை நிலைதில் பால் உற்பத்தி தயாரிப்புகள்  மற்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய பாரம்பரிய உணவுப் பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய சத்துமாவு 






















ஆவாரம் பூ பவுடர்

 பிரண்டை புட்டு மாவு 

 பிரண்டை தைலம் 

 என ஆரோக்கியத்திற்கான கலப்படமற்ற சுத்தமான உணவுகள்  விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..








மன்னாரில் பெண் சுய தொழில் உற்பத்தியாளரின் விற்பனைநிலையம் திறந்து வைப்பு Reviewed by Vijithan on April 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.