அண்மைய செய்திகள்

recent
-

வரலாறு காணாத வருமானம் ; புதிய இலக்கை எட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

 கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.




சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.



தூர இடங்களில் இருந்து மீண்டும் கொழும்பு நோக்கிய பேருந்து சேவைகள் நாளை (15) பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இந்த விசேட போக்குவரத்து சேவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





வரலாறு காணாத வருமானம் ; புதிய இலக்கை எட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை Reviewed by Vijithan on April 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.