சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்: விஜித
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு விழாக்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மின்சார நிறுவனத்திற்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி, இந்த விழாக்களுக்காக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மின்சார நிறுவனத்திற்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி, குறித்த விழாக்களுக்கான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
"பல்வேறு புத்தாண்டு விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. எனவே, புத்தாண்டு காலத்தில் மின்சாரத்தை நாம் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதேவேளை, அந்த விழாக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமான காரணியாகும். அதன் காரணமாக, 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை புத்தாண்டு விழாக்களுக்குத் தேவைப்படின், மின்சார நிறுவனத்தில் கட்டணங்களைச் செலுத்தி மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்" என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Reviewed by Vijithan
on
April 07, 2026
Rating:


No comments:
Post a Comment