அண்மைய செய்திகள்

recent
-

அரச விடுதி சமையலறையில் மர்ம வெடிப்பு ; ஒருவர் படுகாயம் ;

அனுராதபுரம் கெக்கிராவ, தலாவ வீதியில் அமைந்துள்ள அரச விடுதி ஒன்றின் சமையலறையில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.



பொலிஸார் மேலதிக விசாரணை

இந்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 38 வயதுடைய ஒருவராவார்.



அவர் உடனடியாக கெக்கிராவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளது.


இந்த திடீர் வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக, குறித்த அரச விடுதியின் சமையலறை கூரைக்கும் அங்கிருந்த சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது





அரச விடுதி சமையலறையில் மர்ம வெடிப்பு ; ஒருவர் படுகாயம் ; Reviewed by Vijithan on May 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.