மன்னார் தலைமன்னார் வீதியில் கோர விபத்து-பனை மரத்துடன் மினி வேன் மோதி 9 பேர் காயம்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி வான் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய 9 பேரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
May 10, 2026
Rating:
.jpg)





No comments:
Post a Comment