தவெக அரசுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது.
ஆக, மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது தவெக. அடுத்தக்கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எதிர்கொண்டுள்ளது.
புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்து
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,
“தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும்.
இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
May 09, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment