மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி
கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர், நீதிமன்ற கைதி கூண்டுக்குள்ளேயே தன்னுயிரை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவமொன்று இன்று(29) நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றம்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக இனங்கண்டநீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்ட அதிர்ச்சி
தீர்ப்பைக் கேட்ட அதிர்ச்சியில், அந்த நபர் நீதிமன்ற சிறைக்கூண்டுக்குள்ளேயே தன்னுயிரை மாய்த்து கொள்ள முயன்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்ட அவர், '1990' சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசரமாக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வழக்கில் குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (28) தனது வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர் விஷ மருந்து போத்தல் ஒன்றை கொண்டு வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
May 29, 2026
Rating:


No comments:
Post a Comment