அண்மைய செய்திகள்

recent
-

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முல்லைத்தீவில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

 நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முல்லைத்தீவில் மாபெரும் விழிப்புணர்வு  நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முல்லைத்தீவில் மாபெரும் விழிப்புணர்வு  நடைபவனி ஒன்று சிறப்பாக நடைபெற்றது!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய  செயற்திட்டத்தின் குறித்த மாவட்ட மட்ட  விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் (28) காலை 9.00 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக முன்றலில் விழிப்புணர்வு நாடகம் ஒன்று இடம்பெற்றதை தொடர்ந்து அங்கிருந்து மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் பேரணி ஆரம்பமாகி  முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகம் வரை நடைபெற்றது.


"ஒரு அரச சேவை என்பது நேர்மை, வெளிப்படைத்தன்மை, வினைத்திறனான செயற்பாட்டுடன், ஊழல் மற்றும் இலஞ்சம் அற்று உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பொதுமக்களுக்கு சேவை ஆற்றிட வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.  இந்த வேலைத்திட்டமானது க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந் நடைபவனியில்  முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள்,அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினர், க்ளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.














நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முல்லைத்தீவில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி Reviewed by Vijithan on July 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.