அண்மைய செய்திகள்

recent
-

சீட் பெல்ட் இல்லையா? 3 மாதங்கள் மட்டுமே அவகாசம்!

 வாகனங்களில் ஆசனப் பட்டிகள் இல்லாதிருப்பின், அவற்றை பொருத்துவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.


இதன் தலைவர் மஞ்சுள குலரத்ன வலியுறுத்துகையில், அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ஆசனப் பட்டி சட்டம் இன்று (20) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், உற்பத்தியாளரினால் ஆசனப் பட்டிகள் வழங்கப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.


இதன்படி, எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் ஆசனப் பட்டிகளைப் பொருத்த வேண்டும் என்றும், அந்த அவகாசம் இன்று (20) முதல் அமுலுக்கு வருவதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிடுகிறது.


இதுவே இறுதி நீடிப்பாகக் கருதப்படும் அதேவேளை, வாகனத்தினுள் ஆசனப் பட்டிகள் இருக்குமாயின் சாரதியும் அதேபோல் பயணியும் கட்டாயமாக அதனை அணிய வேண்டும், தவறும்பட்சத்தில் அபராதத் தொகைக்கு உள்ளாக நேரிடும்.





சீட் பெல்ட் இல்லையா? 3 மாதங்கள் மட்டுமே அவகாசம்! Reviewed by Vijithan on June 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.