அண்மைய செய்திகள்

recent
-

'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மூர்வீதி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.'

  போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி   'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர்வீதி கிராமத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை மாலை 5.30  மணி அளவில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இடம் பெற்றது.


பிரஜா சக்தி மற்றும் மூர்வீதி கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.


-பிரஜா சக்தி மூர்வீதி கிராம தலைவர் ஏ.ஆர்.றஹீம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,மூர்வீதி கிராம அலுவலர் பெனடிற்,மூர்வீதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அமியஸ்,மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது மன்னாரில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் அதிகரித்து காணப்படும் நிலையில் குறிப்பாக மூர்வீதி கிராமத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தெளிவூட்டல் வழங்கும் வகையில் குறித்த நிகழ்வு பொதுக்கூட்டம் இடம் பெற்றது.


-இதன் போது பிரஜா சக்தி மூர்வீதி கிராம தலைவர் ஏ.ஆர்.றஹீம், மூர்வீதி கிராம அலுவலர் பெனடிற், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் போதைப்பொருள் பாவனை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை வழங்கினர்.


-மேலும் மூர்வீதி கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் தமது வீடுகளைச் சுற்றி எந்த நேரங்களிலும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகள்,போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அறிந்தால் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


மேலும் கலந்து கொண்டவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது .
















'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மூர்வீதி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.' Reviewed by Vijithan on June 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.