அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொல்லை!

  யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.





இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , குறித்த நபரை கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.


சந்தேக நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 










யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொல்லை! Reviewed by Vijithan on June 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.