மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய சுற்று வட்டத்திற்கு முன் இடம் பெற்றது
குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.இதன் போது பிரதேசச் செயலாளர்,உதவி மாவட்டச் செயலாளர்,திணைக்கள தலைவர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இடம் பெற்றது.இதன் போது மக்கள் கலந்து கொண்டு உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்தனர்.மேலும் தொழில் சந்தை இடம் பெற்றது.
பல்வேறு தொழில் வழங்குனர்கள் கலந்து கொண்டதோடு,வேளை வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்ற இளைஞர் யுவதிகள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதோடு,விண்ணப்பங்களையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
June 15, 2026
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment