வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் மீண்டும் சாதனை படைத்த மன் /புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
2026 ஆம் ஆண்டிற்கான வட மாகாண மெய்வல்லுனர் போட்டியானது கடந்த ஐந்து தினங்களாக 22 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை யாழ்ப்பானம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
9 தங்கப் பதக்கங்கள் 🥇
6 வெள்ளிப் பதக்கங்கள். 🥈
6 வெண்கலப் பதக்கங்கள் 🥉
4ஆம் இடங்கள் - 4
5ஆம் இடங்கள் - 3
6ஆம் இடங்கள் - 2
மொத்தமாக 30. இடங்களை பெற்று வரலாற்று சாதனையுடன் 1 🏆ஆம் இடத்தினை இவ் வருடமும் தொடர்ச்சியாக தக்கவைத்துள்ளது....
இப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பொறுப்பாக இருந்த ஆசிரியர்கள் Mr SM.Reginold & Mr S.Dilaxanஅவர்களுக்கும் கல்லூரி அதிபருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.......
இதில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பெற்றுக்கொண்ட சாதனைகள்
12 வயதின் வடமாகாண சிறந்த சுவட்டு மற்றும் மைதான சிறந்த வீரனாக R.ருஷான் தெரிவுசெய்யப்பட்டார் மற்றும் 12,18,20 வயது பிரிவில் வட மாகாண சிறந்த மெய்வல்லுனர் பாடசாலையாக எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டது. மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியனாக எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டது
Reviewed by Vijithan
on
June 27, 2026
Rating:

.jpeg)


No comments:
Post a Comment