அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு


இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப் படுகின்றது. இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அபாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன.

புவியியல்
இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாக கடல் மட்டத்தயுலிருந்து 5 மீட்டர் உயரமுடையதகும்.

மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் கடல் நீரானது நிலப்பரப்பின் பெரும்பாலன பகுதிகளுக்கூடாக செல்வதுடன் பிரதான நிலப்பரப்பிலிருந்து சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடநீரேரி அமைந்துள்ள்மையாகும். இக் கடநீரேரி நகரின் வடக்காகவுள்ள வெருகல் வரை 73.5 கி.மீ வரையிலும் தெற்காகவுள்ள துறைநீலாவணை வரை 35.2 கி.மீ வரையிலும் பரந்துள்ளது.
கடநீரேரிக்கு குறுக்காக சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும் வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழஅகு சேர்க்கிறது.

மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள் மிகப்பெரிய தீவாகும்.கோட்டமுனை நிலப்பரப்பை கல்லடியுடன் இணைக்கும் கல்லடிப்பாலமானது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
லேடி மன்னிங் பாலம் என அழைக்கப்படும் இப்பாலம் அமைநத்துள்ள கடற்பரப்பானது மட்டக்களப்புக்கு தனித்துவமான பாடும் மீன்கள் எனப்படும் ஒருவகை மீன்களின் இருப்பிடமாகும்.முழுமதி தினங்களில் இம்மீன்கள் எழுப்பும் ஒலியானது இசையினில் மெட்டமைத்த பாடல் போன்று இருந்த காரணத்தால் இப்பெயர் வழங்கலாயி்ற்று.


மட்டக்களப்பானது இயற்கை எழில் கொண்ட கடற்கரைகளை கொண்டுள்ளது.பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை .பாசிக்குடா கடற்கரை மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களை கவரும் ரம்யமான அமைப்புடையதாகும்.

மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டதாக காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை செல்சியஸ் அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய மழைவீழ்ச்சியும் காணப்படுகிறது.



புவியியல்

மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை(சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குபகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குபகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது.காடுகள்,விவசாய நிலம்,வாவி,முகத்துவாரம்,கடல்,அணைகள்,களப்பு,இயற்கை துறைமுகம்,குளம் போன்ற புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது.படுவான்கரை பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினை கொண்ட பகுதியாகும்.மட்டக்களப்பு பிரதான நகரினை சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கைவனப்பான விடயமாகும்.


கல்வி நிறுவகங்கள்
பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மை பல்கலைக்கழகமான கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இம் மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 17 கிமீ தொலைவில் மட்-திருகோணமலை நெடுஞ்சாலையில் உள்ளது.

இதுதவிர கிருஸ்தவ மிஷனரிமர்களால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட
புனித மிக்கேல் கல்லூரி,
மெதடிஸ்த மத்திய கல்லூரி,
சிசிலியா பெண்கள் பாடசாலை,
வின்சண்ட் பெண்கள் பாடசாலை போன்றனவும்,
சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட
சிவானந்த வித்தியாலயம்,
ஆனைப்பந்தி மகாவித்தியாலயம்,
கழுதாவளை மகா வித்தியாலயம்
மற்றும் சில முஸ்லிம் வித்தியாலங்கள் போன்றன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச்செயற்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.
இதுதவிர
மஞ்சந்தொடுவாய் தொழினுட்பக்கல்லூரி,
தாழங்குடா கல்வியற் கல்லூரி,
விபுலானந்தா இசைநடனக்கல்லூரி
போன்றவும் முக்கிய கல்வி நிறுவகங்களாகும்.

பொருளாதார நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக அரிசி உற்பத்தியினையும்,மீன்பிடிசார் கைத்தொழிலினையும் குறிப்பிடலாம். தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்த பொழுதும் 1978 ம் ஆண்டின் கொடும் சூறாவளியின் பின்னர் தெங்கு பயிர்செய்கை வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததால் அவை சார்ந்த தொழில்துறை நலிவடைந்துள்ளது.

புள்ளிவிபரவியல்
மட்டக்களப்பானது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 314Km தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும்,இவர்கள் தவிர முஸ்லிம்,சிங்களவர்,பறங்கியர் ஆகிய ஆகிய இனத்தவர்களும் வசிக்கின்றனர்..மதரீதியாகவும் பல்லின மக்களும் வசிக்கின்றனர்.
மட்டக்களப்பு Reviewed by NEWMANNAR on September 11, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.