அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம்-சிறப்புக் கட்டுரை


மன்னாரில் மனிதபிமான சேவை புரிந்து மக்களின் மனதை
கொள்ளை கொண்ட மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம்
1985 ம் ஆண்டு ஆனி மாதம் மன்னாரில் உள்ள ஓர் சில நல் இதயம் படைத்த மக்களாகிய அதி வணக்கத்துக்குரிய முன்னாள் மறைமாவட்ட ஆயரும், இந்நாள் யாழ் ஆயருமாகிய கலாநிதி தோமஸ் சௌவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களும்,
மன்னார் செபஸ்ரியன் கோயில் முன்னாள் பங்குத் தந்தையும், குரு முதல்வரும் ஆகிய வண.பிதா.அ.சேவியர் குரூஸ் அடிகளார் அவர்களும், முன்னாள் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளரும் தற்போதைய யாழ் அரச அதிபருமாகிய திரு..கணேஸ் ஐயா அவர்களும், முன்னால் சிறி சுவர்ண பிம்பராம, புத்த விகாரை பிரதம குரு சிறி தம்முள்ளே தர்மஜோதி இஸ்தவீரர் அவர்களும், முன்னால் தொழில் அதிகாரியும், தற்போது இளைப்பாறியுள்ள திருP.மு.செல்வராஜா அவர்களும், முன்னாள் திட்டமிடல் அதிகாரியும் தற்போதைய வடகிழக்கு செயலாளரும் ஆகிய திரு.S. ரங்கராஜா ஐயா அவர்களும்,
முன்னாள் தபால் அதிபர் ஜனாப் ஆ.கனிபா அவர்களும், முன்னாள் உதவி உணவு ஆணையாளர் ஆகிய காலம் சென்ற திரு.ளு.நடராசா அவர்களும், முன்னாள் மூர்வீதி பள்ளிவாசல் மௌலவி க.ஹிதயத்துல்லாஜ் (கபூரி) அவர்களும், முன்னால் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு பிரம்ம சபா மனோகரசர்மா ஐயா அவர்களும், தற்போதைய வீதி அபிவிருத்தி பிரதம பொறியியலாளர் திரு.S. S.இராமகிருஸ்ணன் அவர்களும்.  காலம் சென்ற முன்னாள் சிலாபத்துறை வைத்தியர் ஜனாப் M.A.அஸீஸ், காலம் சென்ற முன்னாள் வங்காலை பாடசாலை அதிபர் திரு.எஸ்.எஸ்.பீரிஸ், காலம் சென்ற முன்னாள் முஸ்லிம் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஜனாப் S.S.M.கௌத் போன்றவர்கள் மன்னார் மக்களுக்குச் சேவையாற்ற மன்னார் மக்களினால் ஓர் சங்கத்தை உருவாக்க வேண்டுமென தமது நீண்டகால ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதன் பயனாக புனித செபஸ்தியார் கோயில் சிறிய அறையில் இச்சங்கத்தின் ஆரம்ப ஒன்றுகூடல்கள்; மேற்கொள்ளப்பட்டது. இதன்பயனாக 08-06-1985ல் ஐந்து பேர்கொண்ட குழு ஒன்று வண.பிதா.அ.சேவியர் குரூஸ் அடிகளாரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் இரவு பகலாக தமது பொது நேரத்தை ஒதுக்கி ம.து.ம.ச.விற்கு ஓர் அரிய யாப்பினை உருவாக்கித் தந்தனர். இதன் பயனாக முன்னர் நாதன் படமாளிகையாக விளங்கிய தற்போதைய நகர சபைக் கடடிடத்தில்  20-07-1985ல் 112 உறுப்பினர்கள் ஒன்றுகூடிய சபையில் தனது முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தை நடத்தியது.
1985 ல் இருந்து கடந்த 25 வருடங்களில் மன்னார் மக்களினால் “மார்” ( MARR ) என அழைக்கப்படும் ம.து.ம.ச தனது பெயருக்கேற்ப துயர்துடைப்புப் பணிகள்,மறுவாழ்வுப் பணிகள், பொதுப் பணிகள் என முப்பெரும் பிரிவுகளின கீழ் 75.000 ற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளதை காணும்போது பெருமகிழ்ச்;சி அடைகின்றேன்.

துயர்துடைப்பு பணிகளின் கீழ் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், வேறு மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வருகைதந்த இடம்பெயர்ந்த மக்களுக்கும், இந்தியாவுக்குச் சென்று மீண்டும் நாடு திரும்பிய மக்களுக்கும், இயற்கை, செயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாமர மக்களுக்கும், உடனடி அவசர தேவையாகிய தற்காலிக தங்குமிட வசதிகளை பாடசாலை, கோவில்கள், பொது மண்டபங்களில் ஏற்படுத்திக் கொடுத்தும், குடிநீர் வசதி, உணவு, உடை , மருத்துவப்பொருட்கள்,  படுக்கைவிரிப்புக்கள், ஊனமுற்றோருக்கான சேவைகள் போன்றவற்றை பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொண்டர்கள் மூலமாகவும், அரச அதிகாரிகள் மூலமாகவும் வழங்கி வந்தது. இதில் 25,000 ற்கும் மேற்பட்டவர்கள் நன்மை அடைந்தார்கள்.

இயற்கை, செயற்கை அனர்த்தங்களினால் மரணமானவர்களுக்கு மரணச்சடங்கு செய்வதற்குரிய செலவை வழங்கியதுடன் காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான போக்குவரத்துச் செலவை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

விதவைகள்,மறுவாழ்வுப் பணியின்கீழ் கணவனை இழந்த குடும்பத் தலைவிமாருக்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்த வருமானம் பெறுவதற்காக இரண்டு ஏக்கர் நெற்செய்கைக்குரிய உதவி, அரை ஏக்கர் மேட்டுநில உப உணவு பயிர்ச்செய்கை, கால் ஏக்கர் பழமரச் செய்கை, விவசாய உபகரணங்களான கலப்பை, நீர் இறைக்கும் இயந்திரம், மருந்து தெளிக்கும் கருவி போன்றவற்றை வழங்கியது. அவர்களின் சிறார்களுக்கு கல்வி கற்பதற்குரிய உபகரணங்கள், நிதியை வழங்கியும், மீனவ குடும்பங்களுக்கு சிறிய வலைகள், தெப்பம், இயந்திரம், பிளாஸ்ரிக் வள்ளம், கருவாடு பதனிடல், வியாபாரம் செய்தல் போன்றவற்றிற்கு நிதி உதவிகள் வழங்கியது.

மன்னார் மாவட்டம் 70% விவசாயிகளையும், 20% மீனவர்களையும் உள்ளடக்கிய மாவட்டமாகும். விவசாய, கால்நடை, மீனவ மறுவாழ்வு பணியின் கீழ், இதன் அடிப்படையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியமாகவும், கடனாகவும், நெற்செய்கைக்கும், உப உணவு செய்கைக்கும் உதவிகள் புரிந்துள்ளது. இதன் அடிப்படையில் வெளி மாவட்டங்களிலிருந்து விதைநெல், உப உணவுவிதைகள், பழமரக்கன்றுகள், உரங்கள், கிருமிநாசினிகள் போன்றவற்றை புகையிரதம் மூலமாகவும், தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் பெற்று வழங்கி உள்ளது. இப்பணியினால் 21,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
விவசாய சேவைகளின்போது இரவுபகல் பாராது அரும்பணியாற்றிய முன்னாள் அடம்பன் ப.நோ.கூ.சங்க முகாமையாளர் திரு.S. தங்கராசா, காலம் சென்ற முன்னாள் ம.து.ம.ச நிர்வாக உத்தியோகத்தர் திரு.ளு.சபாபதிப்பிள்ளை ஐயா அவர்களையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

மீனவர் புனர்வாழ்வுத் திட்டத்தின்கீழ் நான்கு மீனவ குடும்பங்களை ஒன்றிணைத்து பிளாஸ்ரிக் வள்ளங்கள்,மீன்பிடி இயந்திரங்கள், வலைகள் போன்றவற்றை இரண்டாயிரம் குடும்பங்களுக்கு மேல் வழங்கியுள்ளது. இதில் 50% மானவை 1990 ல் அகதிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றமையினால் தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு மீளப் பெறாமையினால் மிகுந்த வேதனை அடைகின்றோம். இச்சேவையின் மூலம் 2,000 ற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பயன் பெற்றனர். இத்திட்டத்திற்கு உதவிகள் வழங்கிய நோர்வே திரு.நில்சிவட்சன், மறைந்த TRO தலைவர் திரு மு.கந்தசாமி, இளைப்பாறிய தொழில் அதிகாரி திரு. P.K.செல்வராஜாவை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
பொதுப்பணிகளின் கீழ், கல்வி உதவித் திட்டத்தின்கீழ் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு பிற்பகலில் விசேட கல்வியும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மேலதிக புத்தூக்க கல்வியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

யாழ், கண்டி, கொழும்பு, காலி, வவுனியா, மட்டக்களப்பு போன்ற பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சிறார்களுக்கு “பல்கலைக்கழக மானியமாக” பெருந்தொகைப் பணத்தை வழங்கி வருகின்றது. இதன் மூலம் 200 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.

பாடசாலையை விட்டுவிலகிய மாணவர்களுக்கான தொழிற்; கல்வியை இச்சங்கம் வெகு சிறப்பாக நடத்தி வருகின்றது. கணனி பயிற்சியை நடத்துவதற்காக மன்னாரில் விசேடமாக ஒரு தொழில் பயிற்சி நிலையத்தை உருவாக்கி இச்சேவையைச் சிறப்பாகச் செய்து வருகின்றது. இதன்மூலம் 800 ற்கும் மேற்பட்ட பாடசாலை விட்டுவிலகிய சிறார்களும், 100 ற்கும் மேற்பட்ட அரச,தனியார் ஊழியர்களும் பயன் பெற்றுள்ளனர்;.
பெண்களுக்கான தையல் ஆறு மாதகால பயிற்சியை மன்னார், முருங்கன், மடு, நானாட்டான் , சிலாபத்துறை, வங்காலை, குஞ்சுக்குளம், பேசாலை, தலைமன்னார், இலுப்பைக்கடவை போன்ற கிராமங்களில் நடாத்தி பல ஆயிரக்கணக்கான மாணவியரின் தொழில் முயற்சிக்கு உதவிபுரிந்துள்ளது. கடந்த 25 வருடங்களில் 85 ற்கும் மேற்பட்ட பயிற்சிகளை நடாத்தி 1,800 ற்கும் மேற்பட்ட யுவதிகள் பயன் பெற்றள்ளனர். ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்குமுகமாக விசேட ஆங்கில கல்வியை மறைந்த முன்னாள் டிலாசால் சபை பொறுப்பாளர் அருட்சகோதரர் பப்ரிஸ் குரூஸ், திரு.டொமினிக்; மூலமாக நடாத்தி மன்னாரில் ஆங்கிலக் கல்வியை ஊக்குவித்துள்ளது. இதன்மூலம் 800 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
சுகாதார சேவையின் கீழ் முதல் உதவி பயிற்சிகளை வைத்தியர், தாதியர் உதவியுடன் நடாத்தி 50 க்கும் மெற்பட்ட முதல் உதவி பெட்டிகளை மருந்து வகைகளுடன் பின்தங்கிய கிராமங்களுக்கு வழங்கி உள்ளது. போசாக்கற்ற நலிவுற்ற பிள்ளைகளுக்கு போசாக்கு உணவை பாடசாலைகளில் வழங்கி வந்துள்ளது. அத்துடன் 50 ற்கும் மேற்பட்ட போசாக்கு கருத்தரங்கினை UNICEF உதவியுடன் நடாத்தியது.                                                                                                          
முன்னைய ஆண்டுகளில் மன்னார் மாவட்டத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. கிராமங்களில் உள்ள மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து சென்றனர். இதனை கருத்தில் கொண்டு விடத்தல்தீவு, இலுப்பக்கடவை, தேவன்பிட்டி போன்ற கிராமங்களுக்கு பவுசர் மூலமாக குடிநீரை சிறப்பாக வழங்கி வந்தது. இதனால் 6,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்தனர்.
வைத்திய குழுக்களின் உதவியுடன் நடமாடும் சுhகதார சேவையை  முன்னாள் மன்னார் சுகாதார அத்தியட்சர் கலாநிதி ஆ..சிவபாதம் மூலமாக யாழ் புனர்வாழ்வு நிதிய அனுசரனையுடன் நடாத்தியது. இச்சேவைக்கு நிதி உதவி வழங்கிய யாழ் வு.சு.ழு தலைவர் டாக்டர் கா.சிவதம்பி அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். மேலும் மருந்து வகைகளை எமக்கு அனுப்பிய முன்னால் யாழ் (Saturday Review) பத்திரிகை சிங்கள ஆசிரியர் திரு.S.நவரட்ணவுக்கும் எமது நன்றிகள்.
1990ம் ஆண்டில் இராணுவம் மன்னார் தீவை கைப்பற்றிய போது பத்தாயிரம் குடிமக்கள் பாடசாலை, கோயில்களில் தஞ்சம் புகுந்தனர். அக்காலத்தில் மன்னார், மதவாச்சி பாதை துண்டிக்கப்பட்டது தாழ்வுபாடு, கல்பிட்டி கடல் மார்க்கமாக மிகுந்த சிரமத்தின் மத்தியில் அத்தியாவசிய தேவைப் பொருட்கள் கடல் மூலமாகக் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு இலவசமகாகவும் பின்பு மலிவு விலையிலும் விற்கப்பட்டது. இச் சேவையின் மூலம் 5,000 மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் நன்மை அடைந்தனர்.
1988ம் ஆண்டில் ம.து.ம.ச மாதர் அபிவிருத்தி பணி என ஒர் பிரிவை ஏற்படுத்தியது. பின்பு இவ் மாதர் சங்கம் விதவைகளுக்கும், பெண்கள் உரிமை சம்பந்தமாகவும், பெண்கள் அபிவிருத்தி சம்பந்தமாகவும் திட்டங்களை தீPட்டி 1990 வரை சிறப்பாக இயங்கி வந்தது. இச்சங்கம் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் என ஆரம்பத்தில் நிறுவப்பட்டு தற்போது M.W.D.F என சுயமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்படி மாதர் அபிவிருத்தி பணியில் அச்சக பிரிவு ஒன்றும், கடதாசி பேக், அப்பியாச கொப்பிகள் அச்சிட்டும் வழங்கப்பட்டதுடன்  வேலை செய்யும் குடும்பத்தலைவிமாருக்குத் தேவையான உபகரணம்; வழங்கியும் குடிசை கைத்தொழில் செய்வதற்கான பண்ணை வேலை பயிற்சி, தும்பு தொழில்பயிற்சி, சிற்றுண்டிகள்  பொதி செய்து விற்பனை செய்வதற்கான பயிற்சி போன்றவற்றை வழங்கி 1.000 த்திற்கும் அதிகமான குடும்பத்தலைவிமாருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. 
அரசசார்பற்ற ஸ்தாபனங்கள் ஒன்றினைந்து மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக மன்னார் அரசசார்பற்ற ஸ்தபானங்களில் இணையம் (M.A.N.C.O) ஒன்றை ஏற்படுத்தி கொழும்பு தலமை காரியாலயத்துடன் தொடர்புகளை மேற் கொண்டது மூன்று வருடங்களில் பின் இவ் இணையமானது சுயமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
1985ம் ஆண்டில் சிறிய அறையில் அரம்பிக்கப்பட்ட இச்சங்கம் பின்பு 1987ல் வாடகை வீட்டில் காரியாலயம் நடாத்தி. 1989ல் தனக்கென ஒர் கட்டிடத்தை மன்னார் பிரதான வீதியில் கொள்வனவு செய்தது, 1996ல் தொழில்பயிற்சி நிலையத்தை நடாத்துவதற்கான ஒர் கட்டிடத்தை கொள்வனவு செய்தது. 1995ல் மடுவில் கிளைக்காரியாலயம் ஒன்றையும், 1996ல் முருங்களில் கிளைக்காரியாலயம் ஒன்றையும் நடாத்தி வளர்ச்சி கண்டது.
இச்சங்கத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை இச்சங்கத்தின் தலைவராக வண பிதா சேவியர் குரூஸ் அடிகளாhர் தலைவராக இருந்து வருவது எமக்கு பெருமை அளிக்கின்றது. இரு வருடங்களுக்கு ஒருமுறை பொது சபையை கூட்டி புதிய நிர்வாகிகள் 27 பேர் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸதவ, மதங்களை பிரதிநிதித்துவபடுத்துவதுடன் மன்னாரில் ஐந்து உதவி அரச பிரிவுகளில் இருந்து 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது சிறப்பு அம்சமாகும்.
எமக்கு நிதி வழங்கிய ஸ்தாபனங்களை இவ் இருபத்தைந்து வருடத்தில்  நன்றியுடன் நினைவு கூருகின்றோம். ஆரம்ப காலத்தில் எமக்கு கை கொடுத்த சிறுவர் பாதுகாப்பு நிதியம், நோர்வே அகதிகள் புனர்வாழ்வுக்கழகம், யாழ் தழிழர் புனர்வாழ்வுக்கழகம் யாழ் சற்ரடே ரீவியி ஆசிரியர், நோர்வே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் கழகம், யாழ் அகதிகள் புனர்வாழ்வு நிதியம், கெயர் நிறுவனம், பிற்பகுதியில் UNDP, UNHCR, IOM, SOLIDAR, DRC, NECORD, AUS-AID, OXFAM, CHA, GA மன்னார் போன்றவர்களுக்கும். தனிப்பட்ட முறையில் சிறுவர்களின் நிதி வழங்கும் கொடை வள்ளலாகிய திரு. மியுஸ்; (Mouis) என்பவருக்கும் பெயர் குறிப்பிடாத நிதி வழங்கிய பொதுமக்களுக்கும் நாம் தலைவணங்கி நன்றி கூறுகின்றோம்.
சின்கிலேயர் பீற்றர்
முன்னாள் செயலாளரும்,
தற்போதைய உப தலைவர் ம.து.ம.ச,
மன்னார்.
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம்-சிறப்புக் கட்டுரை Reviewed by Admin on January 13, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.