அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் இன்று வழக்கு விசாரனை-அமைச்சர் றிஸாட் நீதிமன்றத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் மன்னார் நீதவானுக்கு அமைச்சர் றிஸாட் பதீயுதீன் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இன்று திங்கட் கிழமை(27-08-2012) மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை இடம் பெறவுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரனைக்காக மன்னார் நீதிமன்றத்திற்கு வரும்படி அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களுக்கு மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க அழைப்பாணை விடுத்திருந்தார்


இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதீயுதின் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதே சமயம் மன்னார் நீதிமன்றம் மீhதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 18 சந்தேக நபர்களும் இன்று திங்கட்கிழமை மன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.


இதே சமயம் மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றத்தால் உத்தரவு பிரப்பிக்கப்பட்ட 26 முக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் உள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்காண நடவடிக்கைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார்(சி.ஐ.டி) மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களில்,அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்றவர்கள்,அதிபர்,ஆசிரியர், உள்ளுராட்சி  மன்ற உறுப்பினர்கள்,வர்த்தகர்கள்,சங்க பிரதிநிதிகள் என பலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் இன்று வழக்கு விசாரனை-அமைச்சர் றிஸாட் நீதிமன்றத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. Reviewed by NEWMANNAR on August 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.