அண்மைய செய்திகள்

recent
-

நீதிபதி அச்சுறுத்தல் விவகாரம்: அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை! 20 சட்டத்தரணிகள் சகிதம் ஆஜர்-(2ம் இணைப்பு)-படங்கள் இணைப்பு

மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் 20 சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இக் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இதற்கமைய அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானவேளை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜூட்சனை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று தொடர்பிர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மேலதி நீரதவான் ரங்க திசாநாயக்க விடுத்த அழைப்பாணையினை ஏற்றுக் கொண்டு இன்று அமைச்சர் மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜரானார்.

கடந்த மாதம் 17 ம்,18 ஆம் திகதிகளில் அமைச்சர் நீதவானுக்கு தொலைபேசியில் தீர்ப்பொன்று குறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் மஜிஸ்திரேட் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இதனையடுத்து அமைச்சரை கைது செய்யுமாறு கோரி நாடு தழுவிய முறையில் நீதிமன்ற பகிஷ்கரிப்பை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அமைச்சர றிசாத் பதியுதீன் இன்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் மன்றில் ஆஜரானார்.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான அனுர மெத்தேகொட, எம்.எம்.சுகைர், எம்.சஹீட், கஸ்ஸாலி ஹூசைன், ஹூனைஸ் பாருக், எஸ்.எல்.ஏ.அஸீஸ், திருமதி.ஆபிய்யா, எஸ்.பாஹிம், அஹமட் முனாஸ், ரோஷன், ஏ.எம்.றபீக், சிராஸ் நுார்தின், ஏ.லதீப் உட்பட 20 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பில் வாதங்களை முன்வைத்தனர்.

முறைப்பாட்டாளர் சார்பில் நான்கு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்த நிலையில் இரண்டரை மணித்தியாலங்கள் வரை வாதப் பிரதி வாதங்கள் மன்றில் இடம்பெற்றன.

இரு தரப்பு வாதப் பிரதி வாதங்களை கேட்டறி்ந்த நீதவான், அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பினை மனுவை ஏற்றுக் கொண்டதுடன், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும்,10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல அனுமதியளித்தார்.

அத்துடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிமன்றம் கோரும் நாட்களில் தவறாது தாம் சமுகமளிப்பதாகவும் உறுதியாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் எனவும் நீதவான் மன்றில் அறிவித்தார்.








அதனைத் தொடர்ந்து, அமைச்சர் றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் உட்பட சட்டத்தரணிகள் உப்புக்குளம் பிரதேச மக்களை பள்ளிவாசலில் சந்தித்து கலந்துரையாடினர்.
நீதிபதி அச்சுறுத்தல் விவகாரம்: அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை! 20 சட்டத்தரணிகள் சகிதம் ஆஜர்-(2ம் இணைப்பு)-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on August 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.