அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீள் குடியேற்றக்கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு-பட இணைப்பு.


இந்திய அரசாங்கத்தினால் உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-பெரியமடு ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.

மகாத்மா காந்தியின் 143 ஆவது பிறந்த நாளான இன்;று குறித்த வீட்டுத்திட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 43 ஆயிரம் வீடுகள் வடக்கில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கும் ஏணைய 7 ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாண மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

-இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்-பெரிய மடு ம.வி பாடசாலையில் இடம் பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ,இலங்கைக்காண இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்கே கே.காந்தா,தேசிய வீடமைப்பு அதிகாரபை அமைச்சர் விமல் வீரவன்ச,கைத்தொழில் மற்றும் வானிபத்துரை அமைச்சர் றிஸாட் பதீயுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






இதன் போது மன்னார்,நாணாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் நிகழ்வு இடம் பெற்ற பெரிய மடு கிராமத்தில் இருந்து எவரும் தெரிவு செய்யப்படவில்லை.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த நிகழ்வு பெரியமடு கிராமத்தில் இடம் பெற்றது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்திற்காண சான்றுதல்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஆயிரக்கணக்காண மக்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வையேட்டியும்,குறித்த பகுதிக்கு அமைச்சர்களின் வருகையினையோட்டியும் பல நூற்றுக்கணக்காண இராணுவத்தினரும்,பொலிஸாரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மீள் குடியேற்றக்கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு-பட இணைப்பு. Reviewed by NEWMANNAR on October 02, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.