அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப் பணித் திட்டமிடல் மாநாடு -2013(பட இணைப்பு).


மன்னார்  மறைமாவட்ட வருடாந்த மேய்ப்புப் பணித் திட்டமிடல் மாநாடு இம்மாதம் 11ம் திகதி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி 12ஆம் திகதி பகல் 1.00 மணியளவில்  நிறைவுபெற்றது. மடு தியான இல்லத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்தில் பணி புரியும் அனைத்துக் குருக்களும் மற்றும் துறவற சபைகளைச் சார்ந்த பிரதிநிதிகளும், பொதுநிலைப் பிரதிநிதிகளுமாக 160 பேர் கலந்துகொண்டனர்.

 திருத்தந்தை 16ஆம் பெனடிக்ற் அவர்கள் 2012 ஒக்ரோபர் 11ஆம் திகதி தொடக்கம் 2013 நவம்பர் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியை 'விசுவாச ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

 இந்த விசுவாச ஆண்டை மன்னார் மறைமாவட்டத்தில் எப்படிக் கொண்டாடுவது என்பது தொடர்பாகத் திட்டமிடும் மாநாடாகவே இது அமைந்திருந்தது. 

 மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் சிறப்புரை, கருத்துப் பரிமாற்றங்கள், குழு ஆய்வுகள் என பலவித நிகழ்வுகள் இடம்பெற்றன. 
 மேய்ப்புப்பணித் திட்டமிடல் குழுவின் செயலாளரும், அன்பிய இயக்குனருமான அருட்திரு. டக்ளஸ் மில்ரன் லோகு அடிகளார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 முதல் நாள், 'விசுவாசத்தின் வாயில்' எனும்  திருத்தந்தையின் திருத்தூது மடல் பற்றிய விளக்கத்தை மன்னார் மறைமாவட்ட குடும்பநல – பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு. எஸ். கே. தேவராஜா அடிகளார் வழங்கினார்.

   அடுத்த நாள் காலை மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், மன்னா பத்திரிகை ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரினால் சிறப்புரை வழங்கப்பட்டது. 'ஆழத்தில் வலைகளைப் போடுங்கள்' (லூக்.5:4) – விசுவாச வாழ்வுப் பயணத்தில் அர்த்தமும் ஆழமும் பெறுவோம்' என்னும் தலைப்பைக்கொண்ட இவ்வுரையானது ஆண்டுத்திட்டமிடலுக்கான கொள்கை விளக்க உரையாக அமைந்திருந்தது. 

ஏறக்குறைய ஒரு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த உரையின் பின்னர் மாநாட்டில் பங்கேற்ற அனைவரும்  நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு உரையை மையமாகக்கொண்ட  கேள்விகளை அடிப்படையாகக்கொண்டு குழுக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

 குழுக்கலந்துரையாடல்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டன.

  இம்மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் மடுவில் இடம்பெற்ற மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணித் திட்டமிடல் மாநாட்டை மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கின்றார். 

அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் கொள்கை விளக்க சிறப்புரை ஆற்றுகின்றார். 

மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினரையும், மாநாட்டு பங்கேற்பாளர்கள் குழுக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதையும் காணலாம்.

அருட்திரு. டக்ளஸ் மில்ரன் லோகு அடிகளார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். 





மன்னார் ஆயரின் நிறைவுரையைத் தொடர்ந்து இளைஞர் பணி ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு. நெவின்ஸ் யோகராஜா பீரிஸ் அவர்களினால் நன்றியுரையோடு இம்மாநாடு முடிவு பெற்றது.
மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப் பணித் திட்டமிடல் மாநாடு -2013(பட இணைப்பு). Reviewed by NEWMANNAR on November 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.