அண்மைய செய்திகள்

recent
-

போருக்குப் பின்னரான இலக்கியங்கள் அதிகம் வெளிவரவேண்டும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்

இந்த மண்ணில் அரங்கேறிய போரின் வலிகள் இன்னும் ஆறவில்லை. போர்க்கால இலக்கியங்கள் போன்று போருக்குப் பின்னரான காலகட்டத்தில் வெளிவரும் இலக்கியங்களும் முக்கியமானவை. போருக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் பதிவுகளாக்கப்படவேண்டும் என அருத்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

  கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் திகதி மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற செல்வி வே. சந்திரகலா (வெற்றிச் செல்வி) அவர்களின் 'முடியாத ஏக்கங்கள்' என்ற சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கலையருவி நிறுவனத்தின் இயக்குனருமான அருடதிரு தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
  அவர் அங்கு உரையாற்றும்போது தொடர்ந்து கூறியதாவது, கதை மனித சமுதாயத்தின் மிகப்பழமையான சொத்தாகும். பழந்தமிழர்களுக்கு கதைச் செல்வம் உண்டு. காவியங்களில், நீண்ட பாட்டுக்களில் பழந்தமிழர் கதைகளை அமைத்து வந்தனர். வாய்மொழியாகவும் தமிழகத்தில் கதைகள் நிலவிவந்தன. சிறுகதைத்தொகுதியாக அமைந்த தனி நூல்கள் பழங்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.
  ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிறுகதை தோன்றி வளரத்தொடங்கியது. முதன் முதலில் அமெரிக்காவில் எட்கர் அலன்போ (நுனபயச யுடடநnpழந) என்பவர் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டார்.  அவரைப் பின்பற்றி ஓஃகென்றியும், பிரான்ஸ் நாட்டில் மாப்பசானும், இரஷ்ய நாட்டில் செகாவும் ஒரு தனி மரபைப் பின்பற்றி சிறுகதையை வளர்த்தனர். இப்படியாக முதலில் அமெரிக்காவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவிய சிறுகதைப் படைப்புப்போல் தமிழில் வெளிவரவேண்டும் என தமிழ் நாட்டில் பணிபுரிந்த மேனாட்டுக் கத்தோலிக்க துறவியான வீரமாமுனிவர் பெருவிருப்புகொண்டார். அவர் எழுதிய பரமார்த்த குரு கதையே தமிழில் தோன்றிய முதல் சிறுகதை என தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
  சிறுகதைக்கே உரிய சில வரைவிலக்கணங்கள் உண்டு. சிறுகதை அளவில் சிறியதாக இருக்கவேண்டும். ஒரு இடத்தில் அமர்;ந்து ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடியதாக இருக்க வேண்டும். சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல்கூடாது. பயனற்ற எந்தக் சொல்லும் சிறுகதையில் இடம்பெறுதல் கூடாது. குதிரைப் பந்தயம் போல சிறுகதையின் தொடக்கமும் முடிவும் சுவையாய் இருத்தல் வேண்டும்.
  போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் வாழ்வியல் அனுபவங்களை இப்படிப்பட்ட சிறுகதைகள் ஊடாக வெளிக்கொண்டுவரவேண்டும். அத்தகையதொரு முயற்சியாகவே இந்தச் சிறுகதைத்தொகுதி அமைகின்றது. போர் தந்த விளைவுகளல் ஒன்றான மாற்றுத்திறனாளிகள் (அங்கவீனமுற்றவர்) பற்றிய இக்கதைகள் முக்கியமான இலக்கியப் பதிவுகளாகும்.
போருக்குப் பின்னரான இலக்கியங்கள் அதிகம் வெளிவரவேண்டும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on December 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.