அண்மைய செய்திகள்

recent
-

பதில் பிரதம நீதியரசர் இரு தினங்களில் நியமனம்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரு தினங்களில் பதில் பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 


இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை 44 ஆவது பிரதம நீதியரசராக புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் என அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிராணி பண்டாரநாயக்க இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.
இந்த அங்கீகார ஆவணத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டார்.
இதனையடுத்து அது தொடர்பான அறிவித்தல் சிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதம நீதியரசரான தம்மை பதவி விலக்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு சிராணி பண்டாரநாயக்கவுக்கு கிடைத்துள்ளதாக அவரின் சட்ட ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பதில் பிரதம நீதியரசர் இரு தினங்களில் நியமனம் Reviewed by NEWMANNAR on January 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.