அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக நடைபெற்ற மன். இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனா் போட்டிகள்.

மன். இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையின் 2013 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனா் திறனாய்வுப் போட்டிகள் பாடசாலை அதிபா் திரு. AQ.J.பொ்ணான்டோ தலைமையில் நேற்றைய தினம்(03.02.2013) சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது .
 
               விழாவின் பிரதம விருந்தினராக திரு.S.தாவீது, கோட்டக் கல்வி அதிகாரி நானாட்டான் அவா்களும், சிறப்புவிருந்தினராக கப்டன். முனசிங்க, இராணுவ முகாம் செம்மண்தீவு அவா்களும் விசேட விருந்தினா்களாக திரு.C.P.அமல்ராஜ் , ஆசிரிய ஆலோசகா் தகவல் தொழிநுட்பம் அவா்களும், திரு.T.ஜேக்கப் ,ஆசிரிய ஆலோசகா் உடற்கல்வி அவா்களும் கலந்து சிறப்பித்தனா்.
         அடுத்து மங்கல விளக்கேற்றல், கொடியேற்றல் வைபவம், சத்தியப்பிரமாணம், அணிநடைவகுப்பு மரியாதையேற்றல் போன்ற சம்பிரதாய  நிகழ்வுகளைத் தொடா்ந்து மாணவா்களின் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.
            போட்டிகளின் இடையே பெற்றோர்களுக்கான நிகழ்வு, பழைய மாணவா்களுக்கான நிகழ்வு , கழகங்களுக்கிடையிலான அஞ்சலோட்ட நிகழ்வு என்பனவும் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டியின் இடைவேளை நிகழ்வாக மாணவா்களின் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்வு மிகச் சிறப்பான முறையில் நிகழ்க்காட்டப்பட்டது. விளையாட்டுப் போட்டியில் பெற்றோர்கள், அயற் பாடசாலை அதிபா், ஆசிரியா்கள், மாணவா்கள் என பல தரப்பட்டவா்களும் கலந்து கொண்டனா். 
                  இறுதியாக பரிசில் வழங்கல் நிகழ்வுகளுடன் விழா நிறைவு பெற்றது.





.
சிறப்பாக நடைபெற்ற மன். இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனா் போட்டிகள். Reviewed by மன்னார் மன்னன் on February 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.