அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண கரப்பந்தாட்ட முடிவுகள்

15 ஆம் திகதி முதல் இன்று 17 ஆம் திகதி வரை, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் 15, 17, 19 வயதுப்பிரிவு கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றது. 
15 வயது ஆண்கள் பிரிவில் ஆவரங்கால் மகாஜனக் கல்லூரி முதலிடத்தையும்,
 இரண்டாம் இடத்தினை கோப்பாய் மகா வித்தியாலய அணியும், 
மூன்றாமிடத்தினை கிளிநொச்சி இராமநாதபுரம் ஜி.ரி.எம்.எஸ். அணியும் பெற்றுக்கொண்டன.

 15 வயது பெண்கள் பிரிவில் முதலிடத்தினை தலைமன்னார் ஜி.ரி.எம்.எஸ் அணி பெற்றுக்கொண்டது. 
தொடர்ந்து இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே துணுக்காய் பாண்டியன்குளம் ஜி.ரி.எம்.எஸ் அணி, 
யாழ்.வயாவிளான் மகா வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன. 

17 வயது ஆண்கள் பிரிவில் முதலிடத்தினை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தினை முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலய அணியும், மூன்றாமிடத்தினை இராமநாதபுரம் ஜி.ரி.எம்.எஸ் அணியும் பெற்றுக்கொண்டன. 

17 வயது பெண்கள் பிரிவில் முதலிடத்தினை ஆவரங்கால் நடராஜராமலிங்க வித்தியாலயமும், இரண்டாமிடத்தினை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தினை அளவெட்டி அருணாசலம் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.

 19 வயது ஆண்கள் பிரிவில் முதலிடத்தினை புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயமும், இரண்டாமிடத்தினை பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை மன்னார் நானாட்டான் வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன. 

19 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும், இரண்டாமிடத்தினை அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தினை சண்டிலிப்பாய் இந்து கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.
வடமாகாண கரப்பந்தாட்ட முடிவுகள் Reviewed by NEWMANNAR on June 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.