அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மெய்வல்லுநர் பயிற்சி முகாம்(படங்கள் )

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், மடு வலயங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு எதிர் வரும் ஜீலை மாதம் 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் வட மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமானது மன்னார் பொது விளையாட்டரங்கில் மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தினால் வலய கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் இம்மாதம் 24ம் 25ம் திகதிகளில் நடாத்தப்பட்டது.

இப்பயிற்சி நெறிக்குரிய வளவாளர்களாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தேசிய பயிற்றுநர்கள் 5 பேர் கலந்து மாணவர்களுக்குரிய சிறப்பான பயிற்சியை வழங்கியுள்ளார்கள். இப்பயிற்சியின் மூலம் நடைபெறவிருக்கும் மாகாண விளையாட்டுப்போட்டியில் மன்னார் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பயிற்சி நெறியில் 140 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் கலந்து பயனடைந்தார்கள். மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் திரு ஜீட் பிகிறாடோ அவர்களும் செயலாளர் திரு ஞானராஜ் அவர்களும் சிறப்பான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் மெய்வல்லுநர் பயிற்சி முகாம்(படங்கள் ) Reviewed by NEWMANNAR on June 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.