அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா 3ஆம் நாள் நிகழ்வுகள்


   தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார் தமிழ்ச் சங்கம் மன்னாரில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (04.08.2013) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறுகின்றன. ஆய்வரங்கம், நிறைவு விழா என இரண்டு அரங்குகளாக இந்த மூன்றாம் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன.
  மூன்றாம் நாள் நிகழ்வின் முதல் அமர்வாக இடம்பெறும் ஆய்வரங்கு 'தமிழறிஞர் அஸீஸ் அரங்கில்' காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறும் இவ்வாய்வரங்கின் வரவேற்புரையை மன்ஃ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜே. அகஸ்ரின் அவர்கள் நிகழ்த்துகின்றார். தொடக்கவுரையை கலைவாதி கலீல் அவர்கள் வழங்குகின்றார்.


 'தனிநாயகம் அடிகளாரும் பழந்தமிழ் பண்பாடும்' என்ற தலைப்பில் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் திரு. சோ. பத்மநாதன் (சோ.ப) அவர்களும், சங்க இலக்கியம் பற்றிய தனிநாயகம் அடிகளாரின் கருத்துக்களும் எதிர்வினைகளும்' என்ற தலைப்பில் தென் கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திரு. க. இரகுபரன் அவர்களும், 'தனிநாயகம் அடிகளாரின் கல்வியியற் சிந்தனைகள்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களும், 'தமிழியல் முயற்சிகளை நிறுவனப்படுத்திய முன்னோடி தனிநாயகம் அடிகளார்' என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் திரு. ச. சசிதரன் அவர்களும், 'தனிநாயகம் அடிகளாரும் தமிழ்த்தேசியமும்' என்ற தலைப்பில் அருட்திரு. செ. அன்புராசா (அமதி) அடிகளாரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். இந்த ஆய்வரங்கின் நன்றியுரையை மடு கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் செல்வி ந. வல்லிபுரம் அவர்கள் வழங்குகின்றார்.


  மாலை 2.00 மணிக்கு இடம்பெறும் நிறைவு விழா நிகழ்வுகள் பண்பாட்டுப் பேரணியுடன் ஆரம்பமாகின்றன. மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகும் இப்பண்பாட்டுப் பேரணி நகரத்தின் சுற்று வளைவு வழியாக மன்னார் நகர மண்பத்தை வந்தடையும். மங்கள இசை, கிராமிய நடனங்கள், தமிழ் பெரியார்களை பிரதிபலிக்கும் வேடப்புனைவுகள், அலங்கார ஊர்திகள் என்பன இப்பேரணியில் இடம்பெறும்.


  நிறைவு நாள் விழாவுக்கு மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்களும், யாழ்ப்பாணம் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும், வைத்திய கலாநிதி காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் அவர்களும் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு. ஏ. நிக்கொலஸ்பிள்ளை அவர்களும், மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் திரு. எம். பரமதாசன் அவர்களும், முன்னாள் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. ஆபேல் றெவ்வல் அவர்களும், மன்னார் நகரசபையின்  செயலாளர் திரு. எக்ஸ். எல். றெனால்ட் பிறிற்றோ அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் எஸ். சுpவலிங்கராஜா அவர்களும், பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
  பல்வேறு கலை நிகழ்வுகளோடு சமூக, கலை, இலக்கியப் பணி புரிந்த உள்ளு}ர் வெளியூர் பெரியார்களைக் கௌரவத்து விருது வழங்கும் நிகழ்வும் இந்நிறைவு விழாவின்போது இடம்பெறும்.



மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா 3ஆம் நாள் நிகழ்வுகள் Reviewed by Admin on August 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.