அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் பகுதியில் மன்னாரில் மாகாண ஆங்கில உதவி மையம் பற்றிய தகவல்கள் படங்கள் வீடியோ இணைப்பு

ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கான செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு மாகாண ஆங்கில உதவி மையம் மன்னாரில் பாரிய சேவையினை ஆற்றிவருகின்றது.

நெடுங்காலமாக மன்னாரில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் தொழில்சார் பயிற்சி நிலையங்கள் எதுவும் இல்லாத நிலை காணப்பட்டது.

இன்நிலையில் நெடுங்காலமாக கல்விமான்கள் மற்றும் மன்னார் மக்கள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்களும் மன்னார் மாவட்டத்தில் தொழில்சார் பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்து தரும்படி தொடர்ச்சியான வேண்டு கோள்களை முன்வைத்திருந்தனர்.

இதனை அடுத்து மன்னார் மாவட்டத்தில் மாகாண ஆங்கில உதவி மையம் ஒன்றை அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி தலைமன்னார் வீதியில் மாகாண ஆங்கில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது வட மாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு மாகாண ஆங்கில உதவி மையம் என்ற சிறப்பினை பெறுகிறது.

இவ் ஆங்கில உதவி மையத்தில் 50 பேர் தங்கி இருந்து பயிற்ச்சியினை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 80 பேர் பயன்பெறக்கூடிய வகையில் விசாலமான மண்டபம் ஒன்றும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மும்மொழி திட்டத்தின் கீழ் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வட மாகாண அரச திணைக்கள உழியர்கள் ,ஆசிரியாகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்ப்பட  பலதரபட்டவர்hளுக்கும் இங்கு மும்மொழி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதேவேளை எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்லும் இளைஞர்களின் நலன் கருதி பன் நாட்டு மொழிகள் இங்கு பயிற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதை மன்னாரில் அமைத்து கொடுத்ததை அடுத்து மன்னார் கல்விசார் சமுகம் மற்றும் மக்கள்  எதிர்காலத்தில் சிறந்த பயனடையவுள்ளனர்.

இதே வேளை குறித்த மாகாண ஆங்கில உதவி மையத்தில் பல குறைபாடுகள் காணப்படுகிறது எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வவர வேண்டும்















விம்பம் பகுதியில் மன்னாரில் மாகாண ஆங்கில உதவி மையம் பற்றிய தகவல்கள் படங்கள் வீடியோ இணைப்பு Reviewed by Author on November 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.