அண்மைய செய்திகள்

recent
-

கடும் மழையின் காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு-மன்னார் மாவட்டத்தில் இது வரை 271குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் இடப்பெயர்வு.-Photos

கடும் மழையின் காரணமாகவும்,மல்வத்து ஓயா பெறுக்கெடுத்துள்ளதன் காணமாகவும் மன்னார் மாவட்டத்தில் இது வரை 271 குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தலைமன்னார்,துள்ளுக்குடியிறுப்பு,எமிழ் நகர்,சாந்திபுரம்,செல்வநகர் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 212 குடும்பங்களைச் சேர்ந்த 657 பேர் மழை வெள்ளத்தினால் பாதீக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொது மண்டபங்கள்,ஆலயங்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.சுமார் 8 இடங்களில் இந்த மக்கள் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தினுள் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேற அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள போதும் அக்கிராமத்தில் உள்ள 360 குடும்பங்களில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இடம் பெயர்ந்த 59 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் தற்போது சின்னப்பண்டிவிருச்சான் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனைய 301 குடும்பங்கள் இது வரை வெளியேறவில்லை.

இதே வேளை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடு,மடுக்கரை,அச்சங்குளம்,இசைமாளத்தாழ்வு ஆகிய நான்கு கிராம மக்களையும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 4 ஆம் கட்டை,மருதமடு,வேப்பங்குளம் ஆகிய மூன்று கிராம மக்களையும் அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பிரிவு வேண்டு கோள் விடுத்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வகின்றமையினால்  மல்வத்து ஓயா பெறுக்கெடுப்பு அதிகரித்தால் குறித்த கிராமங்களுக்குள் வெள்ள நீர் செல்லும் அபாயம் உள்ளதாக மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கையும் அதிகலவில் பாதீப்படைந்துள்ளதாகவும் விவசாய நிலங்கள் குளம் போல் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதீக்கப்பட்ட மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.




கடும் மழையின் காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு-மன்னார் மாவட்டத்தில் இது வரை 271குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் இடப்பெயர்வு.-Photos Reviewed by Admin on December 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.