அண்மைய செய்திகள்

recent
-

இந்திய அணித்தலைவர் டோனி புதிய சாதனை...


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டம்:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் போட்டி யில் 47 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கிரிக் கெட் அரங்கில் புதிய சாதனை நிகழ்தியுள்ளார்.

ஒருநாள் அரங்கில் தலைவராக அதிக ஓட்டங் கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நியு+சிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்கை (6295 ஓட்டங்கள், 218 போட்டி) முந்தி 2வது இடம் பிடித்தார்.

டோனி, இதுவரை 184 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு 6313 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் (8497 ஓட்டங்கள், 230 போட்டி) உள்ளார்.

இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி 18 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி யின் தலைவர்; ஏ.பி.டிவில்லியர்ஸ் முதலில் துடுப் பெடுத்தாட தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், டேவிட் மில்லரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் அடித்து ஆடினர்.

ஒரு பக்கம் டி காக்கும் மறுபக்கம் மில்ல ரும் பவுண்டரிகளாக விளாச, 8.1 ஓவர்களிலேயே 50 ஓட்டங்;களைக் கடந்தது தென் ஆபிரிக்கா.

மின்னல் வேகத்தில் ஓட்டங்;களைக் குவித்துக் கொண்டிருந்த இந்த ஜோடியைப் பிரிக்க, சுழற் பந்து வீச்சாளர்களிடம் தோனி பந்தைக் கொடுத் தார். இது பலன் தந்தது.

ஸ்கோர் 72-ஆக இருந்த போது ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ரஹானே விடம் பிடி கொடுத்து மில்லர் அவுட் ஆனார். இவர் 41 பந்துகளில் 33 ஓட்டங்;களைக் குவித்தார்.

 மில்ல ரைத் தொடர்ந்து அமித் மிஸ்ராவின் பந்துவீச்சில் ஹசிம் அம்லாவும் (5 ஓட்டங்;கள்) ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்காவின் வேகம் சற்று குறைந்தது. 10 முதல் 15-வது ஓவர் வரை அந்த அணியால் 16 ஓட்டங்;களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இருப்பினும் டி காக்குடன் 3-வது விக்கெட்டுக்கு ^ பிளெஸ்ஸி ஜோடி சேர ஆட்டத்தின் போக்கு மாறியது. ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அசுர வேகத்திலும் ஆடிய இந்த ஜோடி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

பல பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தென் ஆபிரிக்காவின் வேகத்தைப் பார்க்கும்போது அந்த அணி மிக எளி தில் 300 ஓட்டங்;களைக் கடக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டது.

இந்நிலையில் 39-வது ஓவரில் மோகித் சர்மா வின் பந்துவீச்சில் புவனேஷ் குமாரிடம் பிடி கொடுத்து ^ பிளெஸ்ஸி (60 ஓட்டங்;கள்) ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டி காக் ரன் அவுட் ஆனார். டி காக் 118 பந்துகளில் 103 ஓட்டங்;களைக் குவித் தார்.

அவரது ஸ்கோரில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். டி காக்கைத் தொடர்ந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் (4 ஓட்டங்;கள்) ஆகியோர் ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்;கள் என்று தென் ஆபிரிக்கா தடுமாறியது.

இறுதிக் கட்டத்தில் பெஹார்டியன் (33 ஓட்டங்கள்) மட்டும் ஓரளவு பொறுப்பாக ஆட தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்க ளில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்;களை எடுத்தது.

இந்திய அணியில் மோஹித் சர்மா 2 விக்கெட்டு களையும், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, அக்'ர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றி பெற 271 ஓட்டங்;களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இந்திய அணி 41 ஓட்டங்; களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே சொதப்பிவரும் 'pகர் தவன், மோர்கலின் பந்தில் டிவில்லியர்ஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே தடு மாறிய அவர் 29 பந்துகளில் 13 ஓட்டங்;களை எடுத் தார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இவர்கள் அதிக பதட்டமில்லாமல் ஸ்கோரை உயர்த்தினர். இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரோஹித் சர்மா, தன் வழக் கமான பாணியில் அடித்து ஆடி அரைசதம் எடுத் தார். ஆனால் 65 ஓட்டங்களை எடுத்திருந்த நிலை யில் டுமினியின் பந்துவீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 113-ஆக இருந்தது.

ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து கோலியுடன் தோனி ஜோடி சேந்தார். கடந்த சில நாட்களாக குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வந்த கோலி, இம்முறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்ப தில் கவனமாக ஆடினார். 64 பந்துகளில் அரை சதத் தைக் கடந்த பிறகும் பழைய வேகத்தில் அவர் அடித்து ஆடவில்லை, தலைவர்; தோனியும் மிதமான வேகத் தில் ஆட, இந்திய அணி விக்கெட்டை இழக்காவிட் டாலும் ஓட்டம் அடிக்கும் வேகம் குறைந்தது.

இத னால் ஒரு கட்டத்தில் 50 பந்துகளில் 78 ஓட்டங் களை அடிக்கவேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இந்த நேரத்தில் அடித்து ஆட முயன்ற தோனி (47 ஓட்டங்;கள்) மோர்கலின் பந்தில் ஸ்டெயினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனியைத் தொடர்ந்து விராட் கோலி (77 ஓட்டங்;கள்), ரெய்னா (0), ரஹானே (4 ஓட்டங்;கள்) ஆகியோர் அட்டமிழக்க இந்திய அணி நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்;களை மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து தென் ஆபிரிக்கா 18 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்க அணி ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்திய அணித்தலைவர் டோனி புதிய சாதனை... Reviewed by Author on October 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.