அண்மைய செய்திகள்

recent
-

றக்பி உலகக் கிண்ண சம்பியனானது நியூ­ஸி­லாந்து...


றக்பி உலகக் கிண்­ணத்தை மூன்­றா­வது முறை­யாக தன­தாக்­கிக்­கொண்­டது நியூ­ஸி­லாந்து அணி.


2015ஆம் ஆண்­டுக்கா றக்பி உலகக் கிண்­ணப்­போட்­டியின் இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மோதிய நியூ­ஸி­லாந்து அணி, 34 -– 17 என்ற கணக்கில் அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்தி சம்­பியன் பட்­டத்தை வெற்­றி­கொண்­டது.

2015ஆம் ஆண்டு றக்பி உலகக் கிண்ணம் இங்­கி­லாந்தில் நடை­பெற்­றது. இதில் மொத்தம் 20 நாடுகள் பங்­கு­பற்­றின. இந்­தப்­போட்டி கடந்த செப்­டெம்பர் மாதம் ஆரம்­ப­மாகி நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை இதன் இறு­திப்­போட்டி நடை­பெற்­றது.

இந்தப் போட்­டியில் நடப்புச் சம்­பி­ய­னான நியூ­ஸி­லாந்தும், முன்னாள் சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லி­யாவும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இதில் 34 -– 17 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் நடப்பு சம்­பி­ய­னான நியூ­ஸி­லாந்து வெற்­றி­பெற்று 2015ஆம் ஆண்­டுக்­கான றக்பி சம்­பியன் என்ற பட்­டத்­தையும் தன­தாக்கிக் கொண்­டது.

அதே­வேளை இவ்­விரு அணி­களும் றக்பி உலகக் கிண்ண இறு­திப்­போட்­டியில் மோதி­யது இதுவே முதல் முறை­யாகும். அதே­வேளை நியூ­ஸி­லாந்து அணி றக்பி உலக கிண்­ணத்தைக் கைப்­பற்­று­வது இது மூன்­றா­வது சந்­தர்ப்­ப­மாகும். இதற்­குமுன் 1987 மற்றும் 2011ஆம் ஆண்­டு­களில் றக்பி சம்­பியன் பட்­டத்தை வென்­றி­ருக்­கின்­றது.

அதே­வேளை றக்பி உலகக் கிண்ணத் தொடரை அடுத்­த­டுத்து இரண்டு தட­வைகள் கைப்­பற்­றிய முதல் அணி என்ற சாத­னை­யையும் நியூ­ஸி­லாந்து பதி­வு­செய்­துள்­ளது.
இதே­வேளை றக்பி உலகக் கிண்­ணத்தின் மூன்­றா­வது இடத்­திற்­கான போட்­டியில் ஆர்ஜன்டீனா –- தென்னாபிரிக்க அணிகள் மோதின. இதில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

றக்பி உலகக் கிண்ண சம்பியனானது நியூ­ஸி­லாந்து... Reviewed by Author on November 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.